க்ரைம்

தஞ்சாவூரில் போலீஸாரை தாக்கிய 2 இளைஞர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு

செய்திப்பிரிவு

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் போலீஸாரை தாக்கிய 2 இளைஞர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் விசிக தலைவர் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்டிருந்த பேனர் அகற்றப்பட்டதைக் கண்டித்து விசிகவினர் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற விளார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(26), திருக்கானூர்பட்டி அய்யப்பன்(27) ஆகியோர் விசிகவினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீஸார் 2 பேரையும் சமாதானம் செய்த போது, மேற்கு காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரகீமை, ஆகாஷ் தாக்கினார். மேலும், அய்யப்பனும் போலீஸாரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

இதையடுத்து, பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பணி செய்யாவிடாமல் தடுத்து தாக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆகாஷ், அய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில், சம்பவத்தின் போது ஆகாஷை தாக்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என பல்வேறு தரப்பினரும் விமர்சித்த நிலையில், ‘‘சம்பவத்தின்போது நிலைமை மோசமாகாமல் இருக்க சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரகீம் முயன்றார்.

அப்போது, அவரை ஆகாஷ் தாக்கினார். மேலும், ஆகாஷை போலீஸார் தேவையின்றி தாக்கியதாக கூறுவது உண்மைக்கு மாறானது’’ என காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், மறியலில் ஈடுபட்ட விசிகவினர் 38 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT