க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.3.4 கோடி கஞ்சா பறிமுதல்: மலேசியாவில் இருந்து கடத்திய பெண் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை விமான நிலை​யத்​தில் ரூ.3.4 கோடி மதிப்​புள்ள உயர்ரக கஞ்சா பறி​முதல் செய்​யப்​பட்​டது.

மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில் இருந்து பயணி​கள் விமானம் சென்​னைக்கு வந்​தது. அதில் வந்த பயணி​களை​யும், அவர்​களின் உடைமை​களை​யும் சுங்​கத்​துறை அதி​காரி​கள் சோதனை செய்து வெளியே அனுப்​பிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது வந்த சென்​னையை சேர்ந்த 30 வயது பெண் மீது சுங்​கத்​துறை அதி​காரி​களுக்கு சந்​தேகம் ஏற்​பட்​டது. சுற்​றுலா விசா​வில் மலேசியா சென்று திரும்​பும் அந்​தப் பெண் வைத்​திருந்த பையை அதி​காரி​கள் சோதனை செய்​த​போது, அதில் ரூ.3.4 கோடி மதிப்​புள்ள 3.4 கிலோ உயர்ரக ஹைட்​ரோ​போனிக் கஞ்சா மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, கஞ்​சாவை பறி​முதல் செய்த அதி​காரி​கள், அந்​தப் பெண்ணை கைது செய்​தனர். விசா​ரனை​யில் அப்​பெண் சர்​வ​தேச போதைப்​பொருள் கடத்​தல் கும்​பலுக்கு கடத்​தல் குரு​வி​யாக செயல்​பட்​டது தெரிய​வந்​தது. சென்​னை​யில் யாரிடம் கஞ்​சாவை கொடுக்​க​விருந்​தார் என்​பது குறித்து அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT