ஷாஜி புருஷோத்​தமன்

 
க்ரைம்

போதையில் காரை ஓட்டியதால் சிறுவன் உயிரிழப்பு: தொழிலதிபர் ஷாஜிக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை

சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மது​போதை​யில் காரை ஓட்​டிய​தால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்​பவத்​தில் மது​பான ஆலை அதிபர் ஷாஜி புருஷோத்​தமனுக்கு 5 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை விதித்து சென்னை அமர்வு நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது.

எம்பீ என்ற மது​பான தயாரிப்பு குழு​மத்​தின் தலை​வ​ரான எம்​.என்​.புருஷோத்​தமனின் மகன் ஷாஜி புருஷோத்​தமன். இவர் கடந்த 2013 மே 22-ம் தேதி தனது நண்​பர்​களு​டன் மது​போதை​யில் சொகுசு கார் ஓட்​டிய​தில், எழும்​பூர் மகப்​பேறு மருத்​து​வ​மனை பகு​தி​யில் சாலை​யில் தூங்​கிக் கொண்​டிருந்த முனி​ராஜ் என்ற 12 வயது சிறு​வன் உயி​ரிழந்​தார். இந்த விபத்​தில் மேலும் 4 பேர் படு​காயமடைந்​தனர்.

இதுதொடர்​பாக அண்ணா சதுக்​கம் போக்​கு​வரத்து புல​னாய்வு போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து ஷாஜி புருஷோத்​தமன் மற்​றும் அவரது நண்​பர்​களான குமார், சையது அன்​வர், அனில்​ராவ் ஆகியோரை கைது செய்​தனர். அனை​வரும் பின்​னர் ஜாமீனில் விடுவிக்​கப்​பட்​டனர்.

பின்​னர், இந்த வழக்​கில் இருந்து சையது அன்​வரை விடு​வித்​தும், அனில் ராவ் மீதான வழக்கை ரத்து செய்​தும் அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஷாஜி புருஷோத்​தமன், குமார் ஆகியோர் மீதான வழக்கு மட்​டும் சென்னை 7-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருந்து வந்​தது.

இந்​நிலை​யில் இந்த வழக்​கில் 13 ஆண்​டு​களுக்கு பிறகு, கடந்த ஜூன் 29-ம் தேதி ஷாஜி புருஷோத்​தமன் குற்​ற​வாளி என்​றும், குமாரை வழக்​கில் இருந்து விடு​தலை செய்​தும் தீர்ப்​பளிக்​கப்​பட்​டது.

அன்று ஷாஜி புருஷோத்​தமன் நீதி​மன்​றத்​தில் ஆஜரா​காத நிலை​யில் தண்​டனை விவரம் அறிவிக்​கப்​ப​டா​மல் அவருக்கு பிடி​வாரன்ட் பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, சென்னை மாவட்ட 4-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்ற நீதிபதி ஆர்​கேபி தமிழரசி முன்பு ஷாஜி புருஷோத்​த

மன் நேற்று சரணடைந்​தார். குற்​றம் சாட்​டப்பட்ட ஷாஜிபுருஷோத்​தமனுக்கு 5 ஆண்டு கடுங்​காவல் சிறை தண்​டனை மற்​றும் ரூ.10,500 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்​பளித்​தார். இதையடுத்​து, அவர் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

SCROLL FOR NEXT