க்ரைம்

நடைபயிற்சிக்கு சென்ற தொழிலதிபர் காரில் கடத்தல்: ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய முகமூடி கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சேத்​துப்​பட்​டு, ஹாரிங்​டன் சாலை 11-வது அவென்​யூவை சேர்ந்​தவர் கமலேசன் ஆபிர​காம் (58). தொழிலதிபரான இவர் தின​மும் காலை கீழ்ப்​பாக்​கம் நேரு பூங்கா அருகே உள்ள மைதானத்​துக்கு நடைப​யிற்​சிக்​குச் செல்​வது வழக்​கம்.

நேற்​று​முன்​தினம் காலை வழக்​கம் போல் நடைப​யிற்​சிக்​காக வீட்​டில் இருந்து புறப்பட்டு சென்ற போது, முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்​பல் காரில் வந்து அவரை கடத்​தினர். மேலும், ’ ரூ.50 லட்​சம் பணத்தை தர வேண்​டும். இல்​லா​விட்​டால் கொலை செய்து விடு​வோம்’ என்று மிரட்டினார்​கள்.

இதனால் பயந்து போன தொழிலதிபர் ஆபிர​காம், தன்​னால் ரூ.50 லட்​சம் தர முடி​யாது என்​றும், ரூ.1 லட்​சம் மட்​டும் தரு​வ​தாக​வும் முதலில் தெரி​வித்​தார். இதனால் கோபம் கொண்ட முகமூடி ஆசாமிகள் அவரை அடித்து உதைத்து சித்​ர​வதை செய்​தனர். வேறு வழி​யில்​லாமல் ரூ.30 லட்​சம் தரு​வ​தாக ஆபிர​காம் ஒப்​புக் கொண்​டுள்​ளார்.

இதையடுத்​து, சென்னை பாரி​முனை​யில் உள்ள ஒரு டீக்​கடைக்கு ரூ.30 லட்​சம் பணத்தை எடுத்து வர வேண்​டும் என்று கடத்​தல்​காரர்​கள், ஆபிர​காமிடம் கூறி அனுப்பி வைத்​தனர். உடனடி​யாக, கீழ்ப்​பாக்​கம் காவல் நிலை​யத்​துக்​குச் சென்று இதுதொடர்​பாக ஆப்​ர​காம் புகார் கொடுத்​தார்.

கடத்​தல்​காரர்​களை பிடிக்க அமைக்​கப்​பட்​ட தனிப்​படை போலீ​ஸார், ஆபிர​காம் கையில் பணம் இருப்​பது போன்று பேப்​பர் கட்​டுக்​களை வைத்து ஒரு பையை கொடுத்து அனுப்​பினர். குறிப்​பிட்ட டீக்​கடை அருகே பணம் வாங்க வந்த கடத்​தல் ஆசாமிகள் 2 பேரை தனிப்​படை போலீ​ஸார் மடக்கி பிடித்​தனர்.

காரில் அமர்ந்​திருந்த மற்ற 2 கடத்​தல்​காரர்​களை​யும் பிடித்​தனர். விசா​ரணையில், அவர்கள் புளியந்​தோப்பை சேர்ந்த ராம்​கு​மார் (23), திரு​வொற்​றியூரை ஜெயகு​மார் (26), ஜெய்​சர​வணன் (20), புதுச்​சேரி செட்​டிகுளம் குப்​பத்​தைச் சேர்ந்த பொன்னி வளவன் (25) என்​பது தெரிந்​தது.இதையடுத்து, அவர்கள் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT