முகேஷ், கண்​ணன்

 
க்ரைம்

சென்னை | ஐ.டி. ஊழியர் வீட்டில் திருடிய அண்ணன், தம்பி கைது

செய்திப்பிரிவு

சென்னை: மதுர​வாயல், சொக்​க​நாதன் நகரில் வசித்​தவர் அன்​றோனின் ஆவிஸ்​மேன் (32). தற்​போது பெங்​களூரு​வில் தங்கி ஐ.டி. நிறு​வனம் ஒன்​றில் பணி செய்து வரு​கிறார்.

இவரது பெற்​றோரும் கடந்​தாண்டு சொந்த ஊரான நாகர்​கோ​விலுக்கு சென்று விட்​டனர். வீட்​டில் யாரும் இல்​லாததை அறிந்து கடந்த 12-ம் தேதி நள்​ளிரவு அவரது வீட்​டின் பூட்டை உடைத்து புகுந்த நபர்​கள் பீரோவை​யும் உடைத்து அதில் வைக்​கப்​பட்​டிருந்த 16 பவுன் கொண்ட 14 தங்க மோதிரங்​கள், 9 ஜோடி தங்க கம்​மல்​கள், 39 தங்க நாண​யங்​கள் மற்​றும் பணம் ரூ.3 லட்​சம் ஆகியவை திருடி​விட்​டுத் தப்​பினர்.

          

இதுகுறித்து மதுர​வாயல் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. போலீ​ஸார் அப்பகுதி சிசிடிவி கேமரா காட்​சிகளின் அடிப்படையில் திரு​வள்​ளூர், காக்​களூரைச் சேர்ந்த சகோ​தரர்​கள் முகேஷ் (26) மற்​றும் கண்​ணன் (27) ஆகியோரை கைது செய்​தனர்.

கைது செய்​யப்​பட்ட சகோ​தரர்​கள் காஞ்​சிபுரத்​தில் இலை வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வந்​துள்​ளனர். அதில் முன்​னேற்​றம் இல்​லாத​தால் குறுக்கு வழி​யில் பணம் சம்​பா​திக்க ஆசைப்​பட்டு திருடியது தெரியவந்ததாக போலீஸார் கூறினர்.

SCROLL FOR NEXT