அப்ரார் அகமது

 
க்ரைம்

பல கோடி ரூபாய் சொத்துக்காக தாயையும், தம்பியையும் கொலை செய்து நாடகமாடிய சகோதரர்கள் கைது

செய்திப்பிரிவு

சென்னை: அண்​ணாநகர் கிழக்கு முதலா​வது அவென்யூ பகு​தி​யைச் சேர்ந்​தவர் அஷ்ரப் நிஷா (68). முடக்​கு​வாதத்​தால் பாதிக்​கப்​பட்​டிருந்த இவர், தனது மகன்​கள் அப்​ரார் அகமது (50), அஸ்​ரார் அகமது (49) மற்​றும் இளைய மகன் அசார் அகமது(42) ஆகியோ​ருடன் கூட்​டுக் குடும்​ப​மாக வசித்து வந்​தார்.

இளைய மகன் அசார் அகமது பல் மருத்​து​வர் ஆவார். நேற்று முன்​தினம் இரவு, வீட்​டில் தனி​யாக இருந்த தாய் நிஷா மற்​றும் மருத்​து​வர் அசார் அகமது ஆகிய இரு​வரும் தரை​யில் மயங்​கிய நிலை​யில் கிடப்​ப​தாக, மற்ற இரு சகோ​தரர்​களும், 108 ஆம்​புலன்ஸ் மற்​றும் போலீ​ஸாருக்​குத் தகவல் தெரி​வித்​தனர்.

சம்பவ இடத்​துக்கு வந்த ஆம்​புலன்ஸ் ஊழியர்​கள், இரு​வரும் ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாகத் தெரி​வித்​தனர். இதையடுத்து அண்​ணாநகர் போலீ​ஸார் உடல்​களைக் கைப்​பற்றி கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு பிரேதப் பரிசோதனைக்​காக அனுப்பி வைத்​தனர்.

உயி​ரிழந்​தவர்​களின் உடலில் ஆங்​காங்கே சிறு சிறு காயங்​கள் இருந்​ததைக் கண்ட போலீ​ஸார், சந்​தேக மரணம் என வழக்​குப் பதிவுசெய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணையின்போது சகோ​தரர்​கள் இரு​வர் மீதும் போலீ​ஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

போலீ​ஸாரின் தீவிர விசா​ரணை​யில் அதிர்ச்​சிகர​மான உண்​மை​கள் வெளிவந்​தன. பல கோடி ரூபாய் மதிப்​புள்ள தங்​களது குடும்​பச் சொத்தை விற்​பனை செய்து பங்​கீடு செய்​வ​தில் சகோ​தரர்​களி டையே நீண்ட நாட்​களாகத் தகராறு இருந்து வந்​துள்​ளது.

இதற்​குத் தாய் நிஷா​வும், தம்பி அசார் அகமது​வும் தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வந்​துள்​ளனர். சம்​பவத்​தன்று மாலை மீண்​டும் இது தொடர்​பாக வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த அப்​ரார் அகமது மற்​றும் அஸ்​ரார் அகமது ஆகிய இரு​வரும் சேர்ந்​து, தங்​கள் தாய் மற்​றும் தம்​பியை அடித்​துக் கொலை செய்​துள்​ளனர்.

கொலை செய்த பிறகு யாருக்​கும் தெரி​யாதது போல வீட்​டைப் பூட்​டி​விட்டு வெளியே சென்ற இரு​வரும், சில மணி நேரம் கழித்து மீண்​டும் வந்து அவர்​கள் மயங்​கிக்கிடப்​ப​தாக நாடக​மாடி​யுள்​ளனர்.

இந்த வழக்​கில் அப்​ரார் அகமது(50), அவரது மனைவி பசியா ஆஸ்​மா(42) மற்​றும் அஸ்​ரார் அகமது(49) ஆகியோரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மேலும் அப்​ரார் அகமது​வின் மகள்,​ மகனை கூர்​நோக்​கு இல்​லத்​தில்​ சேர்​த்​தனர்​.

SCROLL FOR NEXT