க்ரைம்

திருவள்ளூர்: ரூ.12.5 லட்சம் கொள்ளை வழக்கில் கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்துடன் உடைந்த ஏடிஎம் இயந்திரம் மீட்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: ​திரு​வள்​ளூர் அருகே ரூ.12.5 லட்​சம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட சம்​பவத்​தில், பயன்​படுத்​திய வாக​னத்துடன், உடைந்த ஏடிஎம்-யையும் ஆகிய​வற்றை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர் திரு​வள்​ளூர் கூடப்​பாக்​கம் பகு​தி​யில், பூந்​தமல்​லி-​திரு​வள்​ளூர் நெடுஞ்​சாலை​யில் தனி​யார் நிறு​வனத்​தின் ஏடிஎம் மையம் உள்​ளது.

இந்த மையத்​தில் இருந்த ஏடிஎம் இயந்​திரம் மாய​மானது தெரிய​வந்​ததையடுத்து பூந்​தமல்லி காவல் ஆணை​யர், வெள்​ள வேடு போலீ​ஸார் ஏடிஎம் மையம் அருகே உள்ள சிசிடிவி கேம​ராக்​களில் பதி​வான காட்​சிகளை ஆய்வு செய்​தனர்.

முதல் கட்ட விசா​ரணை​யில், ரூ.12.5 லட்​சம் பணம் நிரப்​பப்​பட்​டிருந்த அந்த ஏடிஎம் இயந்​திரத்தை முக​முடி அணிந்த 6 பேர் கொண்ட கும்​பல் கொள்​ளை​யடித்​தது தெரிய​வந்​தது. அந்த கும்​பல் ஆம்னி வேனில் இயந்​திரத்​துடன் தப்​பிச் சென்​றிருப்​பதும் தெரிய​வந்​தது.

இதனிடையே கொள்​ளை​யர்​களைப் பிடிக்க 4 தனிப்​படைகளை அமைத்து போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர். தடய​வியல் நிபுணர்​களை வர வழைத்து ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில் புதுச்​சத்​திரம் அருகே கிருஷ்ணா கால்​வாய் கரை​யில் உடைக்​கப்​பட்ட ஏடிஎம் இயந்​திரம் இருப்​ப​தாக பொது​மக்​கள் போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர். இதையடுத்து போலீ​ஸார் காலி ஏடிஎம்-யைக் கைப்​பற்றி தடயங்​களைச் சேகரித்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

ஏடிஎம் மையம் அரு​கிலேயே இயந்​திரத்தை உடைக்க முடி​யாத​தால் வேறு இடத்​துக்கு எடுத்​துச் சென்று கொள்​ளை​யர்​கள் இயந்​திரத்தை உடைத்​து, பணத்தை எடுத்​துக்​கொண்டு தப்​பிச் சென்​றுள்​ளனர்.

மேலும் ஸ்ரீபெரும்​புதூர் - பூந்​தமல்லி நெடுஞ்​சாலை​யில் தண்​டலம் அருகே கொள்​ளை​யர்​கள் பயன்​படுத்​திய ஆம்னி வேன் கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. கொள்​ளைக்​குப் பயன்​படுத்​திய வாக​னத்தை போலீ​ஸார் மீட்​டனர்.

கொள்​ளை​யர்​கள் ஆம்னி வேனை அங்கு நிறுத்​தி​விட்டு தனித்​தனி இருசக்கர வாக​னங்​கள் மூலம் தப்​பிச் சென்​ற​தாக கூறப்​படு​கிறது. எனவே இருசக்கர வாக​னங்​களின் பதிவு எண்​ணைக் கொண்டு போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT