க்ரைம்

இன்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் விபத்தில் மணப்பெண் பரிதாப உயிரிழப்பு

செய்திப்பிரிவு

மதுரை: திண்​டுக்​கல் மாவட்​டம், வெள்​ளோடு கவின் நர்​சரியைச் சேர்ந்​தவர் ஜெபபாஸ்​டின். ராணுவத்​தில் பணிபுரிகிறார். இவருக்​கும், காமலாபுரம் சக்​கையா நாயக்​க​னூரைச் சேர்ந்த மரிய பென்​சி​யா​வுக்​கும் (26) இன்று (செப்​13) திரு​மணம் நடக்கவிருந்தது.

இந்​நிலை​யில், நேற்று மதுரை​யில் நடந்த நர்​சிங் தேர்​வில் பங்​கேற்க பென்​சி​யா​வும் ஜெப பாஸ்​டினும் இருசக்கர வாக​னத்​தில் புறப்​பட்டனர். வாடிப்​பட்டி அருகே வந்த​போது, முன் சென்ற காரின் டயர் வெடித்​ததால் தாறு​மாறாக ஓடி இருசக்கர வாக​னத்​தில் மோதி​யது. இதில் இருவரும் தூக்கி வீசப்​பட்​டு, சம்பவ இடத்​திலேயே மரிய பென்​சியா உயி​ரிழந்​தார். ஜெபபாஸ்​டின் மதுரை அரசு மருத்​து​வ​மனையில் சேர்க்கப்​பட்​டார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT