கோப்புப் படம்

 
க்ரைம்

கெருகம்பாக்கம் ஊராட்சி தலைவர் மீது லஞ்ச வழக்கு: போலீஸ், ஆட்சியர் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: கெரு​கம்​பாக்​கம் ஊராட்சி அலு​வல​கத்​தில் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் நடத்​திய சோதனை​யில் ரூ.14.25 லட்​சம் கணக்​கில் காட்​டப்​ப​டாத பணம் சிக்​கிய விவ​காரத்​தில், ஊராட்​சித் தலை​வர் ஜெகதீஸ்​வரி உட்பட சிலர் மீதுசென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். இந்​நிலை​யில் விசா​ரணை முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளது.

மனைப்​பிரிவு​களுக்கு ஒப்​புதல் வழங்க கட்​டு​மான நிறு​வனங்​களிடம் ரூ.20 லட்​சம் லஞ்​சம்கேட்​கப்​பட்​ட​தாக கிடைத்த தகவலின் அடிப்​படை​யில், கடந்த 11-ம்தேதி ஊராட்சி அலு​வல​கத்​தில்லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். அப்​போது தலை​வர் அறை​யில் கட்​டுக்​கட்​டாக பணம் இருந்​தது.

அந்த பணம் தொடர்​பாக தலை​வர் ஜெகதீஸ்​வரி மற்​றும் அங்​கிருந்​தவர்​களிடம் விசா​ரணைநடத்​தப்​பட்ட நிலை​யில், அவர்​கள் அளித்த தகவல்​களில் முரண்​பாடு இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்து அங்​கிருந்த ரூ.14.25 லட்​சத்​தை​யும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர்.

தொடர்ந்து ஊராட்​சித் தலை​வர் ஜெகதீஸ்​வரி, துணைத் தலை​வர் லைலா மற்​றும் உறுப்​பினர்​களின் வீடு​கள்உள்​ளிட்ட இடங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது. இதில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து,ஊராட்சி தலை​வர் உட்பட சிலர்மீது சென்னை லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் வழக்​குப்​ப​திவுசெய்​தனர். இது தொடர்​பாக விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இந்த விவ​காரம் தொடர்​பாககாஞ்​சிபுரம் ஆட்​சி​யர் தி.சினேகா கூறுகை​யில், “எங்​களுக்கு கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் ஆரம்ப கட்ட நடவடிக்​கையை தொடங்​கி​யுள்​ளோம். இது தொடர்​பாக சம்​பந்​தப்​பட்​ட​வர்​களிடம் உரிய விளக்​கம் கேட்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார், ஆட்​சி​யர் ஒரே நேரத்​தில் வி​சா​ரணை நடத்தி வரு​வ​தால் இந்த வழக்​கில் மேலும் பல பரபரப்பு தகவல்​கள் வெளி​யாக வாய்ப்​புள்ளதாக கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT