க்ரைம்

சமையல் சிலிண்டர் வெடித்து சிறுவன் உயிரிழப்பு: கணவன், மனைவி உள்பட 4 பேர் படுகாயம்

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: விழுப்​புரம் மாவட்​டம், அரகண்​டநல்​லூர் அரு​கில் உள்ள வீரசோழபுரம் கிராமம். இந்த கிராமத்​தில் வசிக்​கக்​கூடிய ஊர் காவல் படை​யில் பணி​யாற்றி வரும் மூர்த்தி (47) மற்​றும் அவரது மனைவி சரண்யா (42). இவர்​களுக்கு இரு குழந்​தைகள்.

தீபாவளிப் பண்​டிகையையொட்டி, சரண்யா நேற்று காலை சமையலறை​யில் பல​காரங்​கள் தயார் செய்து கொண்​டிருந்​தார். அப்​போது அவருடன் வீட்​டில் அவரது உறவினர்​கள் சுமதி (37), பிரபு (38) மற்​றும் அவரது 10 வயது பத்​ரிநாத் ஆகியோர் இருந்​தனர்.

திடீரென சமையல் சிலிண்​டர் வெடித்​தது. இதில் அவர்​களது வீடு இடிந்து தரைமட்​ட​மானது. சத்​தம் கேட்டு, அக்​கம்​பக்​கத்​தினர் ஓடிவந்து இடிபாடுகளில் சிக்​கிய​வர்​களை மீட்​கும் பணி​யில் ஈடு​பட்​டனர்.

சம்​பவ இடத்​திலேயே சிறு​வன் பத்​ரிநாத் உயி​ரிழந்​தார். படுகாயங்​களு​டன் இருந்த சரண்யா, மூர்த்தி, சுமதி, பிரபுவை மீட்டு சிகிச்​சைக்​காக விழுப்​புரம் முண்​டியம்​பாக்​கம் மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இந்த சம்​பவம் குறித்து அரகண்​டநல்​லூர் போலீ​ஸார் வழக்குப்பதிவு செய்து விசா​ரணை நடத்​திவருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT