கோப்புப் படம்

 
க்ரைம்

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலை

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை, எழும்​பூரில் உள்ள தமிழக காவல் துறை​யின் தலைமை கட்​டுப்​பாட்டு அறைக்கு (அவசர அழைப்பு 100) நேற்று அதி​காலை போன் அழைப்பு ஒன்று வந்​தது.

அதில், எதிர்முனை​யில் பேசிய நபர், ‘சென்​னை, ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வீட்டில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக​வும், அது சிறிது நேரத்​தில் வெடிக்​கும்’ எனவும் கூறி​விட்டு இணைப்பை துண்டித்​தார்.

இதைக் கேட்டு அதிர்ச்​சி​யடைந்த கட்​டுப்​பாட்டு அறை போலீ​ஸார், உடனடி​யாக உயர் அதி​காரி​களுக்கு தகவல் தெரி​வித்​தனர். இதையடுத்​து, முதல்​வர் வீட்​டில் வெடிகுண்டு கண்​டறி​யும் நிபுணர்​கள், மோப்ப நாய்​கள், மெட்​டல் டிடெக்​டர் மூலம் சோதனை செய்​தனர்.

பல மணி நேரம் நடை​பெற்ற சோதனை​யின் முடி​வில் அங்​கிருந்து எந்த வெடிப் பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே, வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​துடன் வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​திருந்​தது தெரிய​வந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக தேனாம்​பேட்டை போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT