பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் போலீஸாருக்கு ஆறுதல் தெரிவித்த மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

 
க்ரைம்

பிரபல ரவுடி மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி: பெரம்பலூர் அருகே பரபரப்பு

செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்​பலூர் அருகே போலீ​ஸார் வேனில் அழைத்​துச் சென்ற பிரபல ரவுடி வெள்​ளைக்காளி மீது ஒரு கும்​பல் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்​றது. இதில் 3 போலீ​ஸார் காயமடைந்​தனர். நாட்டு வெடிகுண்டு வீசிய கும்​பலை பிடிக்க தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மதுரை காம​ராஜபுரம் முத்​து​ராமலிங்க தேவர் தெரு​வைச் சேர்ந்​தவர் காளி​முத்து என்ற வெள்​ளைக் காளி (40). பிரபல ரவுடி​யான இவர் மீது பல்​வேறு காவல் நிலை​யங்​களில் 8 கொலைகள், 7 கொலை முயற்​சி, கஞ்சா கடத்​தல் உட்பட 20-க்​கும் மேற்​பட்ட வழக்​கு​கள் உள்​ளன.

          

2025 மார்ச் மாதம் மதுரை​யில் கிளாமர் காளி என்ற காளீஸ்​வரனை கொலை செய்த வழக்​கில் ரவுடி வெள்​ளைக் காளி உட்பட 7 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சிறை​யில் இருந்​த​படியே ஆட்​களை ஏவி, கிளாமர் காளியை வெள்​ளைக் காளி தரப்​பினர் கொன்​ற​தாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, விசா​ரித்து வந்​தனர்.

இந்​நிலை​யில், சென்னை புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வெள்​ளைக் காளியை, குற்ற வழக்​கு​கள் தொடர்​பாக போலீ​ஸார் திண்​டுக்​கல் மற்​றும் புதுக்​கோட்டை நீதி​மன்​றங்​களுக்கு அழைத்​துச் சென்​று​விட்டு நேற்று மீண்​டும் சென்னை புழல் சிறைக்கு வேனில் அழைத்​துச் சென்று கொண்​டிருந்​தனர். அந்த வேனில் காளி மற்​றும் 10 போலீ​ஸார் சென்​றனர்.

வெள்ளைக் காளி

பெரம்​பலூர் மாவட்​டம் எறையூர் சுங்​கச்​சாவடி அருகே வேனை நிறுத்​தி, ஒரு ஓட்​டலில் சாப்​பிடு​வதற்​காக வெள்​ளைக் காளி​யுடன் போலீ​ஸார் நடந்து சென்று கொண்டு இருந்​தனர். அப்​போது போலீஸ் வாக​னத்தை பின்​தொடர்ந்து 2 கார்​களில் வந்த 15 பேர் கொண்ட கும்​பல், திடீரென வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்​டு​களை வீசி​யது. இதில், காளி அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பி​னார்.

இந்த சம்​பவத்​தில் தென்​காசி மாவட்​டம் புளி​யங்​குடியை சேர்ந்த வினேஷ்கு​மார்​ (37), சென்னை புதுப்​பேட்​டையை சேர்ந்த ராமச்​சந்​திரன்​(54), மதுரை வாடிப்​பட்​டியைச் சேர்ந்த மருது​பாண்​டி(30) ஆகிய 3 போலீ​ஸார் படு​கா​யம் அடைந்​தனர். இதையடுத்​து, ஆயுதப்​படை காவல் உதவி ஆய்​வாளர் ராமசந்​திரன் தனது துப்​பாக்​கி​யால் ரவுடிகளை நோக்​கிச் சுட்​டார். இதனால், அந்த கும்​பல் அங்​கிருந்து தப்​பியோடி​விட்​டது.

பின்​னர், காயமடைந்த 3 போலீ​ஸாரை​யும், ரவுடி வெள்​ளைக் காளியை​யும் போலீ​ஸார் பெரம்​பலூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அழைத்​துச் சென்​றனர். சம்பவ இடத்​தில் காவல் கண்​காணிப்​பாளர் அனிதா விசா​ரணை மேற்​கொண்​டார். வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசி​யது கிளாமர் காளி​யின் கூட்​டாளி​களாக இருக்​கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. இது தொடர்​பாக மங்​களமேடு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

5 தனிப்​படைகள் அமைப்பு: பெரம்​பலூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டுள்ள போலீ​ஸாரிடம் மத்​திய மண்டல ஐ.ஜி. பால​கிருஷ்ணன் நலம் விசா​ரித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: வெள்​ளைக் காளி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய கும்​பலை நோக்கி காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அவரது துணிச்சலான செயலால் அந்த கும்பல் கொலை முயற்சியை கைவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. அந்த கும்பல் குறித்து இது​வரை எந்த தகவலும் கிடைக்​க​வில்​லை. அவர்​களைப் பிடிக்க 5 தனிப்​படை அமைக்​கப்​பட்​டுள்​ளது. விரை​வில் அவர்​கள் கைது செய்​யப்​படு​வார்​கள். இவ்வாறு ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT