க்ரைம்

சென்னை | விடுதியில் சகோதரர்கள் சடலம் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: விருதுநகர் ரோசப்​பட்டி பாண்​டியன் நகரைச் சேர்ந்​தவர் கார்த்​திக் ராஜா (28). இவரது சகோ​தரர் வினோத் (21). இரு​வரும் கடந்த 29-ம் தேதி தேர்வு எழுது​வதற்​காக சென்னை வந்​த​தாகக் கூறி, பெரியமேட்டில் உள்ள தனி​யார் விடுதியில் தங்​கி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு அவர்​கள் தங்​கி​யிருந்த அறை​யில் இருந்து துர்​நாற்​றம் வீசி​ய​தில் சந்​தேகம் அடைந்த விடுதி ஊழியர் சுப்​பிரமணி, ரோந்து பணி​யில் இருந்த பெரியமேடு போலீ​ஸாருக்கு அளித்த தகவலையடுத்து, பெரியமேடு காவல் நிலைய உதவி ஆய்​வாளர் விநாயகம், போலீஸார் விடு​திக்கு விரைந்து சென்​றார்.

சகோ​தரர்​கள் தங்​கி​யிருந்த அறை​யின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்​த​போது, கார்த்​திக் ராஜா, வினோத் ஆகிய இரு​வரும் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் இருந்​தனர்.

இதையடுத்து உடல்​களை​் மீட்​ட போலீ​ஸார், பிரேத பரிசோதனைக்​காக சென்னை ராஜீவ்​காந்தி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். இதுதொடர்​பாக பெரியமேடு போலீ​ஸாரின் முதற்​கட்ட விசா​ரணை​யில், உயி​ரிழந்த சகோ​தரர்​களின் தந்தை, தாய் குடும்​பத்​தினர் இடையே குடும்ப பிரச்​சினை இருந்துள்ளது.

இதனால் மனமுடைந்த இரு​வரும் சில நாட்​களுக்கு முன்பு தாயாருடன் சேர்ந்து தற்​கொலைக்கு முயன்​றுள்ளனர். அப்போது தாய் உயி​ரிழந்​துள்ளார். சகோ​தரர்​கள் உயிர் தப்​பிய​தாக​ போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தாயார் உயி​ரிழந்​த ​துக்​கத்​தில் சகோதரர்​கள் இரு​வரும் மனமுடைந்து சென்​னை விடு​தி​யில் தற்​கொலை செய்து கொண்​ட​தாக முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுகுறித்து போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT