திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே 4 சடலங்கள் மீட்கப்பட்ட காரில் தடயங்களை சேகரிக்கும் தடயவியல் நிபுணர்கள்.

 
க்ரைம்

திசையன்விளை அருகே எரிந்த நிலையில் காருக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்பு

சென்னையைச் சேர்ந்தவர்கள் கடன் தொல்லையால் தற்கொலையா என விசாரணை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: ​திருநெல்​வேலி மாவட்​டம் திசையன்விளை அருகே முற்​றி​லும் எரிந்த காருக்​குள், சென்​னையைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தைச் சேர்ந்த 4 பேர் சடல​மாகக் கிடந்​தனர்.

போலீ​ஸார் உடல்களை மீட்டு விசா​ரணையை தொடங்​கி​உள்​ளனர். கடன் தொல்​லை​யால் அவர்​கள் தற்​கொலை செய்​திருக்​கலாம் என்று முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.

          

திசையன்விளை தாலுகா பெட்​டைக்​குளம் கிராமத்​திலிருந்து ஆற்​றங்​கரை பள்​ளி​வாசல் செல்​லும் சாலை​யில் 3 கி.மீ. தொலை​வில் சாலை​யோரத்​தி​லுள்ள காட்​டுப் பகு​தி​யில் எரிந்த நிலை​யில் கார் ஒன்று நிற்​பது குறித்​து, திசையன்விளை போலீ​ஸாருக்கு நேற்று காலை​யில் தகவல் கிடைத்​தது.

போலீ​ஸார் அங்கு சென்று பார்த்​த​போது முற்​றி​லும் எரிந்த நிலை​யி​லிருந்த காருக்​குள் 4 சடலங்​கள் எரிந்த நிலை​யில் கிடந்​தன. தகவலறிந்து வந்த எஸ்​பி பிரசன்​னகு​மார், டிஎஸ்பி வெங்​கடேஷ் உள்​ளிட்ட போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

தடய அறி​வியல் துறை​யினரும் வரவழைக்கப்பட்டு தடயங்​களை சேகரித்​தனர். எரிந்து சாம்​பலான கார் சென்​னை​யில் பதிவு செய்​யப்​பட்​டது. இதனால், காரில் இருந்​தவர்​கள் 4 பேரும் சென்​னையைச் சேர்ந்​தவர்​களாக இருக்​கலாம் என்ற சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில், காரில் இறந்து கிடந்​தவர்கள் சென்னை நந்​தம்​பாக்​கம் பெரி​யார் நகரைச் சேர்ந்த முகமது ரபி, அவரது மனைவி செய்​யது நஸ்​ரின் பாத்​திமா என்பதும் மற்ற இருவர் இந்த தம்​ப​தி​யரின் மகள்​கள் என்​பதும் தெரிய​வந்​தது.

இவர்​கள் 4 பேரும் கடந்த 13-ம் தேதி திருநெல்​வேலிக்கு வந்​துள்​ளனர். நேற்று முன்​தினம் இரவில் இஸ்​லாமியர்​களின் புனித தலமான ஆற்​றங்​கரை பள்​ளி​வாசல் தர்​கா​வில் நடை​பெற்ற ரமலான் நோன்​பின் 27-வது இரவான, லைலத்​துல் கத்ரு சிறப்பு வழி​பாட்டில் பங்​கேற்​றனர்.

சகர் உணவு முடிந்த பின்​னர், பள்​ளி​வாசலில் இருந்த ஏழைகளுக்கு உடைகளை தான​மாக வழங்​கினர் என ஆற்​றங்​கரை பள்​ளி​வாசல் பகு​தி​யில் நடந்த விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

கடந்த சில மாதங்​களுக்கு முன்பு கடன் தொல்​லை​யால் சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள வீட்டை விற்​ற​தாக​வும், மேற்​கொண்டு கடன் தொல்​லையை சமாளிக்க முடி​யாமல் குடும்​பத்​துடன் தற்​கொலை செய்​திருக்​கலாம் என்​றும் முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

அதே​நேரத்​தில் மர்ம நபர்​களால் 4 பேரும் கொலை செய்யப்​பட்​டார்​களா அல்​லது விபத்து ஏற்​பட்​டதா என்ற கோணத்​தி​லும் விசா​ரணை நடப்பதாக போலீஸார் தெரி​வித்​தனர். முற்​றி​லும் எரிந்த காருக்​குள் 4 பேர் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT