அரி

 
க்ரைம்

பொன்னேரியில் கடன் தவணையை செலுத்த தவறியதால் தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல்: பாஜக நிர்வாகி தற்கொலை

செய்திப்பிரிவு

பொன்னேரி: கடன் தவணையை செலுத்த தவறிய​தால் தனி​யார் வங்கி ஊழியர்​கள் மிரட்​டல் விடுத்​த​தாக கூறப்​படு​கிறது. இதன் காரண​மாக பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலை​வர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ள​தாக எழுந்​துள்ள புகா​ரால் பரபரப்பு ஏற்​பட்​டுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்னேரி, பர்மா நகர் பகு​தியை சேர்ந்​தவர் அரி (35). கார் ஓட்​டுந​ரான இவர், பொன்னேரி நகர பாஜக இளைஞரணி தலை​வ​ராக இருந்து வந்​தார். அரிக்கு சுபலட்​சுமி என்ற மனை​வி​யும், 2 வயது மற்​றும் 1 வயதில் என, 2 ஆண் குழந்​தைகள் உள்​ளனர்.

          

இந்​நிலை​யில், சுபலட்​சுமி தன் குழந்​தைகளு​டன் பெற்​றோர் வீட்​டுக்கு சென்​றிருந்த நிலை​யில், வீட்​டில் தனி​யாக இருந்த அரி நேற்று முன் தினம் மாலை வீட்​டின் கதவை உள்​பக்​க​மாக தாழ்​பாள் போட்டு தூக்​கிட்டு தற்​கொலை செய்து கொண்​டது உறவினர்​கள் மற்​றும் சுபலட்​சுமிக்கு தெரிய வந்​தது.

இதையடுத்​து, அரி​யின் குடும்​பத்​தினர் காவல்​துறைக்கு தகவல் தெரிவிக்​காமல், உறவினர்​கள் மற்​றும் நண்​பர்​களின் அஞ்​சலிக்​காக அரி​யின் உடலை வீட்டு வளாகத்​தில் வைத்​திருந்​தனர். இந்​நிலை​யில், அரி​யின் உறவினர்​கள், அவரது கையில் அலைபேசி எண் ஒன்று எழுதப்​பட்​டிருந்​ததை பார்த்​துள்​ளனர்.

ஆகவே, அவர்​கள் அரி​யின் மொபைல் போனை ஆய்வு செய்​த​போது, இரு சக்கர வாகன கடன் தவணை செலுத்த தவறிய​தால் தனி​யார் வங்கி ஊழியர்​கள் அரியை அவதூறாக பேசி, கொலை மிரட்​டல் விடுத்​தது தெரிய வந்​த​தாக கூறப்​படு​கிறது.

கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை: இதையடுத்​து, அரி​யின் உறவினர்​கள், ‘அரி, தனி​யார் வங்கி கடன் மூலம் தன் மனை​விக்கு இரு சக்கர வாக​னத்தை வாங்​கிய நிலை​யில், கடன் தவணையை சில மாதங்​களாக செலுத்​த​வில்​லை. ஆகவே, தனி​யார் வங்கி ஊழியர்​கள் அரியை மிரட்​டி​யுள்​ளனர்.

இதனால் ஏற்​பட்ட மன உளைச்​சல் காரண​மாக அரி தற்​கொலை செய்து கொண்​டுள்​ளார். எனவே, தனி​யார் வங்கி ஊழியர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என நேற்று காலை பொன்னேரி காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர்.

தொடர்ந்​து, அரி​யின் உடலை மீட்ட போலீ​ஸார், பிரேத பரிசோதனைக்​காக பொன்னேரி அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். பிறகு, போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, விசாரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT