வசந்தகுமார்

 
க்ரைம்

சென்னை | இருசக்கர வாகனங்கள் மோதிய தகராறில் பைக் டாக்ஸி ஓட்டுநர் படுகொலை

செய்திப்பிரிவு

சென்னை: பழைய வண்​ணாரப்​பேட்​டை, அய்யா பிள்ளை தெருவை சேர்ந்​தவர் வசந்​தகு​மார் (21). இவர் பீச் ரயில் நிலை​யம் அருகே செயல்​படும் தனி​யார் ஏற்​றும​தி, இறக்​குமதி நிறு​வனத்​தில் பணி​யாற்றி வந்​தார். பகுதி நேர​மாக ராபிடோ பைக் டாக்ஸி ஓட்​டுந​ராக​வும் வேலை செய்து வந்​தார்.

நேற்​று​முன்​தினம் இரவு திரு​வல்​லிக்​கேணி பகு​தி​யில் வசிக்​கும் தனது பெண் தோழியை சந்​தித்​து​விட்​டு, இருசக்கர வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார்.

சென்னை சென்ட்​ரல் அருகே ஈவெரா சாலை​யில் இருந்து வால்​டாக்ஸ் சாலை நோக்கி சென்​ற​போது, எதிரே வந்த மற்​றொரு இருசக்கர வாக​னத்​துடன் மோதி​ய​தாக கூறப்​படு​கிறது.

இந்த விபத்​தில், இருதரப்​பினருக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது. ஒரு கட்​டத்​தில் ஆத்​திரமடைந்த எதிர்​தரப்​பைச் சேர்ந்த 2 பேர், தாங்​கள் மறைத்து வைத்​திருந்த கத்​தியை எடுத்து வசந்​தகு​மாரின் கழுத்​தில் குத்​தினர்.

பலத்த காயமடைந்த வசந்​தகு​மார், ரத்த வெள்​ளத்​தில் சாலை​யில் சரிந்து விழுந்​தார். இதையடுத்​து, தாக்​குதல் நடத்​திய 2 பேரும் அங்​கிருந்து தப்​பினர். இந்த கொலையை நேரில் பார்த்த பொது​மக்​கள் அதிர்ச்​சி​யடைந்து உடனடி​யாக காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

தகவலின் பேரில், பூக்​கடை காவல் நிலைய போலீ​ஸார் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்​று, உயி​ரிழந்த வசந்​தகு​மாரின் உடலை கைப்​பற்றி பிரேதப் பரிசோதனைக்​காக, சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

மேலும், கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்து தடயங்​களை சேகரித்​தனர். அந்த பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேம​ராக்​களின் பதிவு​களை கைப்​பற்றி ஆய்வு செய்து வரு​கின்​றனர்.

இந்த சம்​பவம் தொடர்​பாக பூக்​கடை போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து தனிப்​படை அமைத்து தப்பி ஓடிய கொலை​யாளி​களை தேடி வரு​கின்​றனர்.

போக்​கு​வரத்து நெரிசல் மிகுந்த சென்னை சென்ட்​ரல் பகு​தி​யில் நடந்த இச்​சம்​பவம், அப்​பகு​தி​யில்​ அதிர்ச்​சி​யை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

SCROLL FOR NEXT