மீட்கப்பட்ட குழந்தையை கொண்டு செல்லும் பாட்டி. (உள்படம்) கைதான மீனாட்சி.படம்: ர.செல்வமுத்துகுமார்

 
க்ரைம்

திருச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட ஆண் குழந்தை 5 மணி நேரத்தில் மீட்பு

செய்திப்பிரிவு

திருச்சி: அரசு மருத்​து​வ​மனை​யில் கடத்​தப்​பட்ட ஆண் குழந்​தையை 5 மணி நேரத்​தில் மீட்ட போலீ​ஸார் குழந்​தையைக் கடத்​திய பெண்​ணைக் கைது செய்​தனர்.

திருச்சி மாவட்​டம் துறையூரைச் சேர்ந்​தவர் விக்​னேஷ்(32). பெயின்​டர். இவரது மனைவி சுகன்யா (30). இந்த தம்​ப​திக்கு ஏற்​கெனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்​ளது.

இந்​நிலை​யில், மீண்​டும் கர்ப்​பம் தரித்த சுகன்​யா, பிரசவத்​துக்​காக கடந்த 11-ம் தேதி திருச்சி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டார். மறு​நாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்​தது. அவருக்கு துணை​யாக, அவரது உறவுப்​பெண் பிரேமா இருந்​துள்​ளார்.

          

சுகன்​யா​வுக்கு பக்​கத்து பெட்​டில் இருந்த பெண் ஒரு​வர், பிரே​மாவுடன் நட்​புடன் பழகி​யுள்​ளார். தனது பெயர் மீனாட்சி என்​றும், 7 மாத கர்ப்​பம் என்​றும், ஹீமோகுளோபின் குறை​பாடு காரண​மாக சிகிச்சை பெற்று வரு​வ​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இந்​நிலை​யில், நேற்று காலை 7 மணி​யள​வில் சுகன்​யா​வின் குழந்​தைக்கு தடுப்​பூசி போடு​வதற்​காக கொண்டு செல்​வ​தாக கூறி, பிரே​மா​விடம் இருந்து குழந்​தையை வாங்​கிச் சென்ற அந்​தப் பெண், மீண்​டும் வார்​டுக்கு திரும்பி வரவில்​லை.

மருத்​து​வ​மனை வளாகத்​தில் பல இடங்​களில் தேடி​யும் மீனாட்​சி​யை​யும், குழந்​தையை​யும் காணாத​தால் அதிர்ச்​சி​யடைந்த சுகன்​யா, பிரேமா ஆகியோர், அரசு மருந்​து​வ​மனை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தனர். இது தொடர்​பாக போலீ​ஸார் விசா​ரித்​தனர்.

அப்​போது, மீனாட்சி என்ற பெயரில் யாரும் அந்த வார்​டில் நோயாளி​யாக அனு​ம​திக்​கப்​பட​வில்லை என்​பது தெரிய​வந்​தது. மகப்​பேறு வார்டு உள்​ளிட்ட பகு​தி​களில் அமைக்​கப்​பட்​டுள்ள சிசிடிவி காட்​சிகளை ஆய்வு செய்​த​போது, குழந்​தையை தூக்​கிச் செல்​லும் அந்​தப் பெண், அரசு மருத்​து​வ​மனைக்கு வெளியே ஆட்டோ ஒன்​றில் ஏறிச் சென்​றது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அந்​தப் பெண்ணை தனிப்​படை​யினர் தீவிர​மாக தேடி வந்​தனர்.

இந்​நிலை​யில், திருச்சி மாவட்​டம் துறையூரை அடுத்த மலை​யாளப்​பட்டி என்ற இடத்​தில் பதுங்​கி​யிருந்த மீனாட்சி​யை, குழந்​தை​யுடன் பிடித்​தனர். விசா​ரணை​யில், அவர் சேலம் மாவட்​டம் தம்​மம்​பட்டி உப்​போடை புதூரைச் சேர்ந்த சுரேஷ் மனைவி மீனாட்​சி(38) என்​பதும், திரு​மண​மாகி பல ஆண்​டு​களாகி​யும் குழந்தை இல்​லாத​தால், மருத்​து​வ​மனை​யில் சுகன்​யா​வுடன் நட்​புடன் பழகி குழந்​தையை கடத்​திச் சென்​றதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, அவரைக் கைது செய்த போலீ​ஸார், குழந்​தையை மீட்​டு, அவரது பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர். கடத்​தப் ​பட்ட குழந்​தையை 5 மணி நேரத்​தில் மீட்ட போலீ​ஸாரை, காவல் ஆணை​யர் காமினி பாராட்​டி​னார்.

​விஜய் கோரிக்கை: தவெக தலை​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “அரசு மருத்​து​வ​மனை​களில் உள்ள பிரசவ வார்​டு​களில், பாது​காப்பு ஏற்​பாடு​களை தீவிரப்​படுத்த வேண்​டும். குழந்தை கடத்​தலைத் தடுக்க, பயோ-மெட்​ரிக் முறை அல்​லது அடை​யாள அட்டை சரி​பார்ப்பு போன்ற நவீன தொழில்​நுட்​பங்​களை உடனடி​யாக நடை​முறைப்​படுத்த வேண்​டும்” என்று வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

SCROLL FOR NEXT