க்ரைம்

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: போலீஸை பார்த்து மர்ம நபர்கள் தப்பியோட்டம்

செய்திப்பிரிவு

கும்மிடிப்பூண்டி: அரசு வங்​கி​யின் ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்து கொள்ளை முயற்​சி​யில் ஈடு​பட்ட மர்ம நபர்​கள், ரோந்து போலீ​ஸாரைப் பார்த்து தப்​பியோடியுள்​ளனர்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மி​டிப்​பூண்டி, சென்னை-கொல்​கத்தா தேசிய நெடுஞ்​சாலையை ஒட்டி பாரத ஸ்​டேட் வங்​கி​யின் ஏடிஎம் மையம் செயல்​பட்டு வரு​கிறது.

நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் ஏடிஎம் மையம் உள்ள பகுதி​யில் கும்​மி​டிப்​பூண்ட சிப்​காட் போலீ​ஸார் ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது அங்​கிருந்த மர்ம நபர்​கள் இரு​வர், போலீ​ஸாரை கண்​ட​வுடன் ஓட்​டம் பிடித்​தனர்.

போலீ​ஸார் அவர்​களை விரட்​டிப் பிடிக்க முயன்​றபோதும், அவர்​கள் சிக்​காமல் தப்​பினர். சந்​தேகமடைந்த போலீ​ஸார், ஏடிஎம் மையத்​தினுள் சென்று ஆய்வு செய்​த​போது, ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்து கொள்​ளை​யடிக்​கும் முயற்​சி​யில் அவர்​கள் ஈடு​பட்​டதும், போலீ​ஸாரை கண்​டதும் கடப்​பாரை, சுத்​தி​யல், கையுறை, காலணிகள் ஆகிய​வற்றை அங்​கேயே விட்​டுவிட்டு தப்​பியோடியதும் தெரிய​வந்​தது.

இத​னால் ஏடிஎம் இயந்​திரத்​தில் இருந்த சுமார் ரூ.6 லட்​சம் தப்​பியது. தொடர்ந்து கைரேகை நிபுணர்​கள், மோப்ப நாயை வரவழைக்​கப்​பட்டு தடயங்​கள் சேகரிக்​கப்​பட்​டன. பின்​னர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி, மர்ம நபர்​களை தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர்.

தொடர் சம்​பவங்​கள்

கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி, இதே பகுதி​யின் எதிர் திசையில் உள்ள ஒரு மையத்​தில் மர்ம நபர்​கள் ஏடிஎம் இயந்​திரத்தை உடைத்து ரூ.12 லட்​சத்தை கொள்​ளை​யடித்​தனர்; மற்​றொரு மையத்​தில் ஏடிஎம் இயந்​திரத்தை உடைக்க முடி​யாமல் தப்​பினர்.

அவர்​கள் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி காஞ்​சிபுரம் மாவட்​டம், சோமங்​கலம் அருகே புதுப்​பேடு கிராமத்​தில் ஐசிஐசிஐ வங்​கி​யின் ஏடிஎம் மையத்​தில் ரூ.9 லட்​சம் கொள்​ளை​யடிக்​கப்​பட்ட வழக்​கில் கைதானவர்​கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

இச்​சம்​பவம் அரங்​கேறி 3 மாதங்​கள் முடிவதற்​குள் அதே கும்​மி​டிப்​பூண்​டி​யில் மீண்​டும் ஒரு கொள்ளை முயற்சி சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT