உள்படம்: ராஜுபிஸ்வகர்மா

 
க்ரைம்

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: அசாம் இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: தமிழகத்​தை உலுக்​கிய, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட வழக்​கில், அசாம் இளைஞர் ராஜுபிஸ்​வகர்​மாவுக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும், ரூ.1.45 லட்​சம் அபராத​மும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்​ளது.

திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆரம்பாக்கம் பகு​தியை சேர்ந்​தவர் 8 வயது சிறுமி. இவர் ஆரம்​பாக்​கத்​தில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வரு​கிறார். கடந்த ஜூலை 12-ம் தேதி பள்ளி முடிந்​து தன் பாட்டி வீட்​டுக்கு சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த இளைஞர், சிறுமியை மாந்​தோப்புக்கு தூக்​கிச் சென்​று, பாலியல் வன்​கொடுமை செய்​து விட்டு தப்​பியோடி​னார்.

இச்​சம்​பவம் குறித்​து, ஆரம்பாக்கம் போலீ​ஸார் போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, சம்பவ இடம் அருகே இருந்த கண்​காணிப்பு கேமரா காட்​சிகளை ஆய்வு செய்​தனர். அதில், சிறுமியை வடமாநில இளைஞர் ஒரு​வர் பின் தொடர்​வது தெரிய​வந்​தது.

அந்த இளைஞரை கண்​டு ​பிடிக்க முடி​யாமல் தொடக்​கத்​தில் போலீ​ஸார் திணறினர். அதே நேரத்​தில், குற்​ற​வாளியை கைது செய்யக் கோரி, பலர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். இதற்​கிடையே, திரு​வள்​ளூர் எஸ்பி விவே​கானந்த சுக்​லா​வின் மேற்​பார்​வை​யில் 20 சிறப்​புக் குழுக்​கள் அமைக்​கப்​பட்​டு, புலன் விசா​ரணை தீவிரப்​படுத்​தப்​பட்​டது.

தமிழகம் மட்​டுமல்​லாமல், பிற மாநிலங்​களி​லும் சிறப்​புக் குழுக்​கள், குற்​ற​வாளியை தேடும் பணி​யில் ஈடு​பட்டு வந்​ததோடு, குற்​ற​வாளி குறித்து தகவல் அளிப்​பவருக்கு ரூ.5 லட்​சம் சன்​மான​மாக வழங்​கப்​படும் என, அப்​போதைய டிஜிபி சங்​கர் ஜிவால் அறி​வித்தார்.

இச்​சூழலில், சிறப்​புக் குழுக்​களின் தீவிர தேடு​தல் வேட்​டை​யின் பலனாக, சிறுமியை பாலியல் வன்​கொடுமை செய்​தது தொடர்​பாக ஆந்​திர மாநிலம், சூளூர்​பேட்​டை​யில் தாபா ஒன்​றில் பணிபுரிந்​து​வந்த அசாம் மாநிலத்​தைச் சேர்ந்த காலே பிஸ்​வகர்மா என்​கிற ராஜுபிஸ்​வகர்மா (35) என்ற இளைஞரை ஜூலை 26-ம் தேதி போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை, திரு​வள்​ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. வழக்கு விசா​ரணை​யில், அரசு தரப்​பில் வழக்​கறிஞர்​கள் விஜயலட்​சுமி மற்​றும் புவனேஸ்​வரி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். வழக்கு விசா​ரணை முடி​வில், ராஜுபிஸ்​வகர்மா மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது.

இதையடுத்​து, இவ்​வழக்கின் தீர்ப்​பை, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமா மகேஸ்​வரி நேற்று அளித்​தார். அதில், ராஜுபிஸ்​வகர்​மாவுக்கு இரட்டை ஆயுள் தண்​டனை​யும், ரூ.1.45 லட்​சம் அபராத​மும் விதித்​து, நீதிபதி உமாமகேஸ்​வரி உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும், பாதிக்​கப்​பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்​சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்​துரைத்​துள்​ளார்​.தமிழகத்தை உலுக்​கிய இந்த பாலியல் வன்​கொடுமை சம்​பவம் நடை​பெற்ற 5 மாதங்​களில், நீதி​மன்​றம் குற்​ற​வாளிக்கு தண்​டனை அளித்​துள்​ளது குறிப்​பிடத்​தக்கது.

SCROLL FOR NEXT