ராம் ரகு​நாத்

 
க்ரைம்

ஜிஎஸ்டி அதிகாரிபோல் நடித்து 1.5 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்ற வழக்கில் மேலும் ஒருவர் ராஜஸ்தானில் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஜிஎஸ்டி அதி​காரி​ போல் நடித்​து, 1.5 கிலோ தங்க நகை பார்​சல்​களை ஏமாற்றி எடுத்​துச் சென்ற வழக்​கில் தலைமறை​வாக இருந்த மேலும் ஒரு​வர் ராஜஸ்​தானில் கைது செய்​யப்​பட்​டார்.

சென்னை, சவு​கார்​பேட்​டை, பெரிய​நாயக்​கன் தெரு​வைச் சேர்ந்​தவர் ராவல்​சிங் (30)கூரியர் நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

          

கடந்த 6-ம் தேதி மீனம்​பாக்​கம், விமான நிலைய கார்​கோ​வில் வந்​த இவர்​களது கூரியர் நிறு​வனத்​தின் பார்​சல்​களில் 1.5 கிலோ தங்க நகைகள் அடங்​கிய குறிப்​பிட்ட சில பார்​சல்​களை மட்​டும் எடுத்து வர, இவரது நிறு​வனத்​தில் வேலை செய்​து​ வரும் கோவா​ராம் மற்​றும் அதே கட்​டிடத்​தில் உள்ள மற்​றொரு கூரியர் நிறு​வனத்​தில் வேலை செய்​து​வரும் ராஜஸ்​தானைச் சேர்ந்த ஜித்​தேந்​தர்​கு​மார் (31) ஆகியோரை பைக்​கில் அனுப்பி வைத்​தார்.

ஆனால், வெகு நேர​மாகி​யும் அவர்​கள் திரும்பி வரவில்​லை. இரு​வரது செல்​போனும் சுவிட்ச்​-ஆஃப் செய்​யப்​பட்​டது.

சில மணி நேரத்​துக்​குப் பிறகு ஆட்டோ ஓட்​டுநர் ஒரு​வரின் செல்​போனிலிருந்து பேசிய கோவாரம், “நாங்​கள் இரு​வரும் தங்க நகைகள் அடங்​கிய பார்​சல்​களை எடுத்​துக் கொண்டு பைக்​கில் திரும்ப வரும் வழி​யில், கிண்டி மேம்​பாலம் அருகே 2 பேர் எங்​களை வழிமறித்​து, செங்​கல்​பட்டு ஜிஎஸ்டி அலு​வலக அதி​காரி​கள் எனக்​கூறி எங்​களிட​மிருந்த பார்​சல்​களை​யும், செல்​போன்​களை​யும் வாங்​கிக் கொண்​டு, எங்​கள் இரு​வரை​யும் ஆட்​டோ​வில் அழைத்​துச் சென்று பெருங்​களத்​தூர் அருகே இறக்​கி​விட்டு சென்​று​விட்​டனர்” என்று தெரி​வித்​தார்.

இது தொடர்​பாக, கிண்டி காவல் நிலை​யத்​தில் ராவல்​சிங் புகார் அளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பார்​சலை எடுத்​துச் சென்ற ஊழியர்​களில் ஜித்​தேந்​தர்​கு​மார் தனது சொந்த மாநில​மான ராஜஸ்​தானிலிருந்து நண்​பர்​களை சென்​னைக்கு வரவழைத்​து, திட்​டம் தீட்டி ஜிஎஸ்டி அதி​காரி​கள் போல நடிக்க வைத்து தங்​க நகை பார்​சல்​களு​டன் சொந்த ஊருக்கு தப்​பிச் சென்​றது தெரிந்​தது.

இதையடுத்​து, ஜித்​தேந்​தர்​ கு​மார் கடந்த மாதம் 20-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார். தலைமறை​வாக இருந்த அவரது கூட்​டாளி​யான குஜ​ராத் மாநிலத்​தைச் சேர்ந்த ராம் ரகு​நாத் (39) ராஜஸ்​தானில் பதுங்கி இருந்​த ​போது கைது செய்​யப்​பட்​டார். இவ்​வழக்​கில், தொடர்​புடைய மேலும் சிலரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்​.

SCROLL FOR NEXT