க்ரைம்

‘ஜனநாயகன்’ இணையதளத்தில் வெளியான விவகாரம்: மூளையாக செயல்பட்ட மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஜனநாயகன்’ திரைப்​படம் இணை​யதளத்​தில் சட்ட விரோத​மாக வெளி​யான விவ​காரத்​தில், மேலும் ஒரு​வரை சைபர் க்ரைம் போலீ​ஸார் கைது செய்​தனர்.

‘ஜன​நாயகன்’ திரைப்​படம் திரையரங்​கு​களில் வெளி​யா​காத நிலை​யில், சட்ட விரோத​மாக இணை​யதளங்​களி​லும், சமூக வலை​தளங்​களி​லும் வெளி​யானது. இதுகுறித்​து, படத்​தின் தயாரிப்பு நிறு​வனம் மாநில சைபர் க்ரைம் காவல்​துறை​யில் புகார் அளித்தது.

அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி, சினிமா உதவி எடிட்​டர், மென்​பொருள் பொறி​யாளர் உட்பட 18 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். இதில், தொடர்​புடைய சில முக்​கிய குற்​ற​வாளி​கள் மீதுகுண்​டர் சட்​ட​மும் பாய்ந்தது.

இந்​நிலை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய முக்​கிய குற்​ற​வாளி​யும், மூளை​யாக செயல்​பட்​ட​வரு​மான மேலும் ஒரு​வரை சைபர் க்ரைம் போலீ​ஸார் தற்​போது கைது செய்​துள்​ளனர்.

விசா​ரணை​யில், ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை இணை​யதளங்​களில் சட்ட விரோத​மாகப் பரப்​பிய​தில் இவருக்கு முக்​கியப் பங்கு இருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது.

வழக்கு விசா​ரணைக்கு இடையூறு ஏற்​படும் என்​ப​தால், கைதானவரின் பெயரை போலீ​ஸார் வெளி​யிட​வில்​லை. இந்த வழக்​குத் தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT