பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை கைது செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர். (உள்படம்) ஞானவேல் பாபு

 
க்ரைம்

3 ஆண்டுகளாக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக அண்ணா பல்கலை. பேராசிரியர் கைது

சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்​றச்​சாட்​டில் அண்ணா பல்​கலைக் கழகப் பேராசிரியர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். சென்னை அண்ணா பல்​கலைக் கழகத்​தில் 3-ம் ஆண்டு படிக்​கும் மாணவி ஒரு​வர், காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேற்று முன்​தினம் நேரடி​யாகச் சென்று புகார் ஒன்றை அளித்​தார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: பல்​கலைக்​கழக விடு​தி​யில் தங்கி படித்து வரு​கிறேன். ‘எனது குடும்​பம் ஏழ்​மை​யானது. எனக்கு சென்னை கிண்​டி​யில் உள்ள அண்ணா பல்​கலைக் கழகத்​தில் பேராசிரிய​ராக பணி செய்து வரும் செங்​கல்​பட்​டைச் சேர்ந்த ஞானவேல் பாபு​வின் (50) அறி​முகம் ஒரு​வர் மூலம் கிடைத்தது.

          

படித்து பெரிய ஆளாக வேண்​டும் என்ற ஆசை மற்​றும் கனவு இருந்​தது. ஆனால், போதிய வழி​காட்​டல் இல்​லை. இதை அறிந்த பேராசிரியர் ஞானவேல் பாபு எனக்கு உதவுவ​தாக நம்​பிக்கை அளித்​தார். பின்​னர், அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் சேர்ந்து படிக்க உதவி செய்​தார்.

கல்வி உதவித்தொகை பெற உதவினார். இதனால், அவர் மீது எனக்கு நன்மதிப்பு ஏற்​பட்​டது. இந்​நிலை​யில், நாட்​கள் செல்லச் செல்ல அவரது அணுகு​முறை மற்​றும் செயல்​பாட்​டில் மாற்​றம் ஏற்​பட்​டது.

எனது செல்​போன் எண்​ணுக்கு அடிக்​கடி தொடர்பு கொண்​டார். இரட்டை அர்த்​தத்​தில் ஆபாச​மாக பேசத் தொடங்​கி​னார். மேலும், ஆபாச​மான வீடி யோக்​கள் மற்​றும் குறுஞ்​செய்​தி​களை​யும் தொடர்ந்து அனுப்​பி​னார்.

இதையடுத்​து, நான் படிப்​படி​யாக வில​கினேன். நான் கண்​டித்​தும் கேட்​காமல் 3 ஆண்​டாக தொடர் அத்​து​மீறலில் ஈடு​பட்டு வரு​கிறார். அவர் மீது சட்​டப்​படி நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இவ்​வாறு அந்​தப் புகாரில் மாணவி தெரி​வித்​திருந்​த​தாக போலீ​ஸார் கூறினர். இதுகுறித்​து, உரிய விசா​ரணை நடத்த, கோட்​டூர்​புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார்.

அதன்​படி, வழக்​குப் பதிந்​து அவர் வசித்து வந்த கோட்​டூர்​புரம் குடி​யிருப்​புக்​குச் போலீஸார் சென்​றனர். ஆனால், அவர் அங்​கிருந்து தலைமறை​வா​னார். இதையடுத்​து, தனிப்​படை அமைத்து போலீ​ஸார் தேடினர்.

இந்​நிலை​யில், அவர் திருநெல்​வேலி மாவட்​டம் வள்​ளியூரில் உள்ள உறவினர் வீட்​டில் பதுங்கி இருந்​தது தெரிந்​தது. பின்​னர் அங்​குள்ள போலீ​ஸார் உதவி​யுடன் ஞானவேல் பாபுவை நேற்று தனிப்​படை போலீ​ஸார் கைது செய்து சென்​னைக்கு அழைத்து வந்​தனர்.

முன்​ன​தாக, ஞானவேல்​பாபுவை கைது செய்​யக்​கோரி அண்ணா பல்​கலைக்​கழகம் முன்பு இந்​திய மாணவர் சங்​கத்​தினர் நேற்று போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இதற்​கிடையே, பேராசிரியர் ஞானவேல்​பாபுவை பணி​யிடை நீக்​கம் செய்து பல்​கலைக்​கழகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது. இதுஒரு​புறம் இருக்க அவர் மீது மேலும் சில மாணவி​கள் புகார் தெரி​வித்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

தலைவர்கள் கண்டனம்

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரின் இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT