பொப்​பலாட்டா ஸ்ரீனு

 
க்ரைம்

சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: வீடு கட்​டு​வதற்​காக சென்​னை​யில் நகை பறிப்​பில் ஈடு​பட்ட ஆந்​திர கொள்​ளை​யன் கைது செய்​யப்​பட்​டார். சென்​னை, பெரம்​பூர், முனியப்​பன் தெரு​வில் வசித்து வருபவர் கல்​யாணி (65).

இவர் கடந்த 3-ம் தேதி காலை, சந்​தைக்​குச் சென்று காய்​கறி வாங்​கி​ விட்டு பெரம்​பூர், பாரதி 1-வது தெரு​விலுள்ள பிள்​ளை​யார் கோயில் அருகே நடந்து சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது, அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு இளைஞர், கல்​யாணி கழுத்​தில் அணிந்​திருந்த தங்​கச் செயினை பறித்​தார். அதிர்ச்சி அடைந்த அவர், தங்​கச் செயினை இறுகப்​பிடித்​துக்கொள்​ளவே, செயினின் ஒரு பகுதி மட்​டும் கொள்ளை​யன் கையில் சிக்​கியது.

அதோடு கொள்​ளை​யன் ஓட்டம் பிடித்​தார். இந்த நகை பறிப்பு குறித்து செம்​பி​யம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யில், நகைப் பறிப்​பில் ஈடு​பட்​டது ஆந்​திர மாநிலத்​தைச் சேர்ந்த பொப்​பலாட்டா னு (22) என்​பது தெரிந்​தது.

தலைமறைவாக இருந்த அவரை போலீ​ஸார் நேற்​று​முன்​தினம் கைது செய்​தனர். விசா​ரணை​யில், பொப்​பலாட்டா னு சென்​னை​யில், புறநகர் ரயி​லில் ஏடிஎம் கார்டு மற்​றும் ஆதார் கார்​டு​களின் பவுச்​களை விற்​பனை செய்து வந்​ததும், இவரது பெற்​றோர் வீடு​கட்​டு​வதற்கு பணம் தேவைப்பட்​ட​தால், நகை பறிப்​பில் ஈடுபட்​டதும், திருடிய தங்​கச் செயினை விற்​பனை செய்​வதற்​காக உருக்கி தங்​கக் கட்​டி​யாக மாற்றி வைத்​திருந்​ததும் தெரிய வந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்​து, அவரை போலீ​ஸார் சிறை​யில் அடைத்​தனர்.

SCROLL FOR NEXT