க்ரைம்

காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு சிறை தண்டனை

செய்திப்பிரிவு

சென்னை: காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு விதிக்​கப்​பட்ட ஓராண்டு சிறை தண்​டனையை நிறுத்​தி​வைத்து சென்னை சிறு வழக்​கு​களுக்​கான நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நடிகர்​கள் விமல், பிரபு, நடிகை ஆனந்தி உள்​ளிட்​டோர் நடித்த படம் மன்​னர் வகையறா. இப்​படத்தை தயாரிக்க திரைப்பட பைனான்​சி​யர் கோபி என்​பவரிட​மிருந்து விமல் ரூ.4.5 கோடியை கடனாகப் பெற்​றிருந்​தார்.

இதற்​காக விமல் வழங்​கிய காசோலை வங்​கி​யில் பணமின்றி திரும்​பியதையடுத்​து, அவருக்கு எதி​ராக சென்னை சிறுவழக்​கு​கள் நீதி​மன்​றத்​தில் காசோலை மோசடி வழக்கை கோபி தொடர்ந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை சென்னை 11-வது சிறு வழக்​கு​களுக்​கான நீதி​மன்​றத்​தில் நீதிபதி ஆர்த்தி முன்​பாக நடந்​தது. விசா​ரணைக்​காக நடிகர் விமல் நேரில் ஆஜராகி​யிருந்​தார்.

பைனான்​சி​யர் கோபி தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர்​.வெங்​கடேஷ், “நடிகர் விமல் வழங்​கிய ரூ.4.5 கோடி காசோலை பணமின்றி திரும் பிய நிலை​யில், அந்த தொகையை கொடுக்க விமல் முன்​வர​வில்​லை” என வாதிட்​டார்.

அதையடுத்து வழக்கை விசா​ரித்த நீதிப​தி, குற்​றம்​சாட்​டப்​பட்ட நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்​டனை விதித்​தும், வாங்​கிய கடன் தொகையை முழு​மை​யாக திருப்பி செலுத்​த​வும் உத்​தர​விட்​டார்.

தண்டனை நிறுத்திவைப்பு

அதைத்​தொடர்ந்​து, இந்த உத்​தரவை எதிர்த்து மேல்​முறை​யீடு செய்​ய​வுள்​ள​தாக​வும், எனவே தனக்கு விதிக்​கப்​பட்ட சிறை தண்​டனையை நிறுத்​திவைக்​கக் கோரி​யும் விமல் தரப்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதையடுத்து விமலுக்கு விதிக்​கப்​பட்ட ஓராண்டு சிறை தண்​டனையை நிறுத்​தி​வைத்​து நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

SCROLL FOR NEXT