எஸ்.வி.சேகர் | கோப்புப் படம் 
க்ரைம்

வெளிநாட்டில் இருந்து மிரட்டல்: எஸ்.வி.சேகர் புகார்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக ஆதரவாளரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சென்னை மந்தைவெளி டிரஸ்ட் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறார்.

இவர், சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார். இதனால், தனக்கு வெளிநாட்டில் இருந்து ராமலட்சுமி முருகன் என்பவர் சில நாட்களாக கொலை மிரட்டல் விடுத்து வருவதாக சென்னை பட்டினப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் எஸ்.வி.சேகர் புகார் அளித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கருத்துகள் கூறுவதாக கூறி, செல்போனில் தன்னை தொடர்பு கொண்டு பேசும் அந்த நபர், தரக்குறைவான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT