சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று புறப்பட தயாராக இருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிகொண்டிருந்தனர். அப்போது வந்த சென்னையை சேர்ந்தஆண் பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்ததில், அவர் உள்ளாடை மற்றும் சூட்கேசுகளில் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர், சவுதிஅரேபியா ரியால் கரன்சி அதிக அளவில் இருந்தது. மொத்தம் ரூ.3.37 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரதுபயணத்தை ரத்து செய்துவிட்டு விசாரணையை தொடங்கினர்.
இது கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்பதும், வேறு ஒருவர் ஹவாலா பணத்தை, இவரிடம் கொடுத்து சிங்கப்பூருக்கு கடத்தியிருப்பதும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.