க்ரைம்

கும்பகோணம் | சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு வாழ்நாள் சிறை: போக்சோ நீதிமன்றம் உத்தரவு

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு வாழ்நாள் சிறை விதித்து, தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருதாநல்லூர் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ராஜேந்திரன்(45). இந்நிலையில், கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி ராஜேந்திரன் மீது சிறுமி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டுகின்றார் எனவும் ராநாச்சியார்கோயில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் போலீஸார் ராஜேந்திரனை கைது செய்தனர். இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி, ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சிறையும், ரூ. 20 ஆயிரம் அபராதமும், இதை செலுத்தத் தவறினால், ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.

போக்சோ வழக்கில் புகாரளித்து ஓராண்டுக்குள் வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது

SCROLL FOR NEXT