புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேசப் பெருமாள், இணையதளத்தில் பகுதி நேர வேலை தேடியுள்ளார். அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் அதிக வருமானம் பெற திட்டம் இருப்பதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
அதனை நம்பிய வெங்கடேச பெருமாள் பணம் முதலீடு செய்துள்ளார். அதில் கிடைத்த லாபம் ரூ.27,46,849 வங்கிக் கணக்கில் இருந்துள்ளது. ஆனால் அந்த பணத்தை எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வெங்கடேச பெருமாள் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நாசர் (45) கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 34 ஏடிஎம் கார்டுகள், 40 காசோலைப் புத்தகங்கள், 22 வங்கிக்கணக்கு புத்தகங்கள், 10 செல்போன்கள், ஒரு கணினி சாதனம், கார் ஆகியவற்றை கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ.11 லட்மாகும்.