கைது செய்யப்பட்ட ஜெயச்சந்திரன், பிரகாஷ், இசக்கிமுத்து ஆகியோருடன் பறிமுதல் செய்யப்பட குட்கா பொருள்கள். 
க்ரைம்

ராஜபாளையத்தில் 375 கிலோ குட்கா பறிமுதல்: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர்: ராஜபாளையத்தில் வேனி கடத்திச் செல்லப்பட்ட 375 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கும் ஆபரேசன் 4.0 தேடுதல் வேட்டையை போலீஸார் பல்வேறு இடங்களில் நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ஆசிரியர் காலனி வழியாகச் சென்ற வேனை சோதனையிட்டபோது, அதில் குட்கா பொருட்கள் கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது.

இது தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மம்சாபுரம் பரமசிவம் நாடார் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்ற சேட்டன் (30), வடக்கு மலையடிப்பட்டி தெருவைச் சேர்ந்த பிரகாஷ் (23), இசக்கிமுத்து (24) ஆகியோரை கைது செய்தனர். வேன் மற்றும் 375 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT