க்ரைம்

விஏஓ கொலை வழக்கில் கைதான 2 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை

செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சூசை பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (55). முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த மாதம் 25-ம் தேதி முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த 2 பேர் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

இதுதொடர்பாக முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து,கலியாவூர் வேதகோயில் தெரு வைச் சேர்ந்த ராமசாமி மகன் ராம சுப்பிரமணியன் (எ) ராமசுப்பு (41) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகியோரை கைது செய்தனர். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள் ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல் துறையில் புகார் அளித்த தால் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை செய் யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங் கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT