பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

நீதிமன்றம் அருகே கத்தியால் வெட்டியதில் ஒருவர் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது 6-வது நுழைவாயில் முன்பு திடீரென ஒருவர் மற்றொருவரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டார். உயிரிழந்தவர் நீதிமன்ற வளாகத்தின் அருகே உள்ள ஒரு தனியார் பொது கழிப்பிடத்தில் வேலை பார்த்து வந்த மிதுன் என விசாரணையில் தெரியவந்தது. இவருக்கும் கொலை செய்த நபருக்கும் ரூ.10 ஆயிரம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளியை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT