க்ரைம்

விருதுநகர் | பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.70 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் அழிப்பு

இ.மணிகண்டன்

விருதுநகர்: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட ரூ.4.70 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் விருதுநகரில் இன்று அழிக்கப்பட்டன.

விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் காவல் உட்கோட்ட பகுதிகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதியில் ரூ.2.60 லட்சம் மதிப்பிலான 1,861 மது பாட்டில்கள், சாத்தூரில் ரூ.1 லட்சம் மதிப்பிலான 731 மது பாட்டில்கள், எம்.புதுப்பட்டியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 358 மது பாட்டில்கள், திருத்தங்கல் ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 170 மது பாட்டில்கள், பரளச்சியில் ரூ.18 ஆயிரம் மதிப்பிலான 128 மது பாட்டில்கள்,

ஆலங்குளத்தில் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான 63 மது பாட்டில்கள், அருப்புக்கோட்டையில் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 26 பாட்டில்கள், வெம்பக்கோட்டை ரூ.4 ஆயிரம் மதிப்பிலான 27பாட்டில்கள், அம்மாபட்டியில் 6 மது பாட்டில்கள், அப்ப நாயக்கப்பட்டியில் 8 மது பாட்டில்கள் என மொத்தம் சுமார் ரூ.4.70 லட்சம் மதிப்பிலான 3,378 மது பாட்டில்கள் இன்று விருதுநகர் கொண்டு வரப்பட்டன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாக பின்புறத்தில் முற்புதல் உள்ள பகுதியில் கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம் தலைமையில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்.ஐ. ஞானசேகன் மற்றும் போலீஸார் முன்னிலையில் பாட்டில்களிலிருந்த மது கீழே கொட்டி அழிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT