சென்னை: ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட 8 நிதிநிறுவனங்கள் தமிழகம் முழுவதும்2.91 லட்சம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி ஆசியம்மாள் சென்னை அசோக் நகரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் கைது செய்துள்ளோம்.
வெளிநாடு தப்பிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. குறிப்பாக ஆருத்ரா நிதி நிறுவனத்தில் 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்நிறுவனத்தின் மேலாளர் ராஜசேகர், அவரது மனைவியும் இயக்குநருமான உஷா ராஜசேகர் இருவரும் வெளிநாடு தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் உதவியை நாடி உள்ளோம். இந்தவழக்கில் இதுவரை ரொக்கமாக ரூ.6.35 கோடியும், தங்கம், வெள்ளிஎன ரூ.1.13 கோடி மதிப்புள்ள நகைகள், 22 கார்கள் கைப்பற்றப்பட் டுள்ளன.
இந்நிறுவனம், அதன் இயக்குநர்கள், முக்கிய ஏஜென்ட்களின் வங்கி கணக்குகளில் இருந்தரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய 103அசையா சொத்துகள் பறிமுதல்செய்ய தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.
ஹிஜாவு நிறுவனம் 4,400 கோடிவரை வசூலித்து மோசடி செய்துள்ளது. இந்நிறுவனத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 162 பேரின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
ரூ.75.6 கோடிமதிப்புள்ள அசையா சொத்துகளையும், ரூ.90 கோடி மதிப்புள்ள54 அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புகாருக்குள்ளான அனைத்து நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.
பாஜக பிரமுகர்கள் தொடர்பு: ஆருத்ரா நிறுவனம் தொடர்பான வழக்கில் பாஜக பிரமுகர்களின் தொடர்பு பற்றி விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷ் குற்றவாளி இல்லை. அவரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. இதனால்அவரை நேரில் ஆஜராக சம்மன்அனுப்பப்பட்டுள்ளது. அவர் துபாயில் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆருத்ரா உட்பட 4 நிதி நிறுவனங்கள் தொடர்பான விவரங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.