க்ரைம்

கும்பகோணம் | பாஜக மாநில நிர்வாகி வீட்டில் சோதனை: வெடிப் பொருட்கள், ஆவணங்கள் பறிமுதல்

சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் பாஜக மாநில நிர்வாகி வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில் வெடிப்பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் அண்மையில், சுமார் 10 ஆயிரம் சதுரடியிலுள்ள இடத்தை இலவசமாக எழுதித் தர வேண்டும் என, அதன் உரிமையாளரிடம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்த இடத்தின் உரிமையாளர், இவருக்கு பயந்து இருந்த நிலையில், இது குறித்து திருவிடைமருதூர் டிஎஸ்பிக்கு தகவல் வந்தது. இதனையடுத்து கடந்த 26-ம் தேதி, டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக் தலைமையில், காவல் ஆய்வாளர் கே.ரேகாராணி மற்றும் 15-க்கு மேற்பட்ட போலீஸார், அவரது வீட்டிற்குச் சென்றனர்.

இதனையறிந்த கார்த்திகேயன், போலீஸார் வருவது தெரிந்து தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரது வீட்டில் நடத்திய சோதனையில், வெடிபொருட்கள், பட்டாக்கத்தி மற்றும் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து நாச்சியார்கோயில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியது, “பேருந்து உரிமையாளரான கார்த்திகேயன், அப்பகுதியிலுள்ள ஒருவரின் இடத்தை எழுதித் தரக் கேட்டு மிரட்டியுள்ளார். அவர், புகாரளித்ததின் பேரில், கார்த்திகேயனை விசாரணைக்காக 3 முறை அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வாராததால், அவரது வீட்டிற்குச் சென்றோம். அவர், நாங்கள் வருவதையறிந்து, எங்களை அச்சுறுத்தும் விதமாக உயர் ரக நாய்களை அவிழ்த்து விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பின்னர், அவரது வீட்டிலிருந்து வெடிபொருட்கள், பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டை மற்றும் ஏராளமான வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பத்திர ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளோம். அந்த ஆவணங்களை வைத்து வேறு யாராவது இவரிடம் சிக்கியுள்ளார்களா என விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், இவர் அண்மையில் இங்குத் திறக்கப்பட்ட நகைக்கடையையும் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு காவல் நிலையங்களில் ரவுடி பட்டியலில் உள்ளார்” எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT