க்ரைம்

பெரியகுளம் அருகே புதையல் எடுப்பதாக கூறி ரூ.1.40 லட்சம் திருட்டு

செய்திப்பிரிவு

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி வாணியர் தெருவைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாஷ்(41). வெள்ளைப்பூண்டு வியாபாரி. வியாபாரம் சரி இல்லாததால் சிவகங்கையைச் சேர்ந்த ராம்குமார் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அதற்கு அவர் பரிகார பூஜை செய்தால் சரியாகும் என்று கூறி, கடந்த ஆக.18-ம் தேதி ஞானப்பிரகாஷின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் புதையல் இருப்பதாகக் கூறி, பூஜை செய்து கருப்பு மையை ஞானப்பிரகாஷின் நெற்றியில் பூசி உள்ளார்.

இதில் இவர் மயங்கவே, வீட்டில் இருந்த ரூ.1.40 லட்சத்தை ராம்குமார் திருடிச் சென்றார். பின்னர் நினைவு திரும்பியபோது தான் ஏமாற்றப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.பணத்தை பலமுறை கேட்டும் அவர் தரவில்லை.புகாரின் பேரில் தென்கரை காவல் சார்பு ஆய்வாளர் அழகுராஜா விசாரிக்கிறார்.

SCROLL FOR NEXT