க்ரைம்

ராமநாதபுரம் | பாஜக நிர்வாகியை கொல்ல முயன்ற வழக்கில் மேலும் ஒருவர் கைது

செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவர் தரணி முருகேசனை கொலை செய்வதற்காக அவரது வீட்டுக்கு கடந்த 16-ம் தேதி இரவு அரிவாளுடன் வந்த சென்னையைச் சேர்ந்த கூலிப்படையினர் இருவர் பிடிபட்டனர்.

போலீஸார், கூலிப்படையினர் சென்னை எண்ணூரைச் சேர்ந்த மோகன்(34), புது வண்ணாரப்பேட்டை சுரேஷ்(34) மற்றும் ராமநாதபுரம் விக்னேஸ்வரன், பாஜக வழக்கறிஞர் சண்முகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், அவரது ஓட்டுநர் பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். இதில் மோகன், சுரேஷ், பாலமுருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்திருந்த நிலையில், நேற்று விக்னேஸ்வரனை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT