அக்‌ஷயா, சத்யராஜ், வினோத் குமார். 
க்ரைம்

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்ஐ மீது தாக்குதல்: பெண் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: குற்றச் செயல்களை முன் கூட்டியே கண்டறிந்துதடுக்க சென்னையில் வாகன சோதனை மற்றும்தணிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி, சூளைமேடு காவல் நிலைய போலீஸார் எஸ்ஐலோகிதாட்சன் தலைமையில் நேற்று முன்தினம் அதிகாலை, சூளைமேடு மற்றும் நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சூளைமேடு சக்தி நகர், 3-வது தெருவைச் சேர்ந்த சத்யராஜ் (32), நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவைச் சேர்ந்த வினோத் குமார் (32) ஆகியோர் ஓர் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டும் மற்றொரு இருசக்கர வாகனத்தை டோ (தள்ளிக்கொண்டும்) செய்து கொண்டும் அந்த வழியாக வந்தனர். அவர்களை மடக்கி போலீஸார் விசாரித்தனர்.

அப்போது, போலீஸார் பல்வேறு கேள்விகளைக் கேட்டது மட்டுமல்லாமல் சில அநாகரிக வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இரு தரப்புக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் மது குடித்ததைக் கண்டறியும் ‘பிரீத் அனலைசர்’ கருவி மூலம் சோதனை செய்யமுயன்றபோது சத்யராஜ், வினோத் குமார் இருவரும்மறுப்பு தெரிவித்து போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனராம். மேலும், அவர்கள் வந்த வாகனங்களின் ஆவணங்களைக் கேட்டபோது, ஓர் இருசக்கர வாகனத்துக்கு ஆவணங்கள் சரியாக இருந்தன, மற்றொரு இருசக்கர வாகனத்துக்கு ஆவணங்கள்இல்லாததால், ஆவணங்களைக் காண்பித்து வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு போலீஸார் கூறினர்.

அப்போது, சத்யராஜ் தனது மனைவி அக்‌ஷயாவை(30) போன் செய்து வரவழைத்துள்ளார். அங்கு வந்த அக்‌ஷயாவும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். `குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்தால்தான் அபராதம் விதிக்க வேண்டும். வண்டியைதள்ளிக்கொண்டு வந்தால் பைன் போடக்கூடாது' என ஆவேசமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் எஸ்ஐ லோகிதாட்சனை கையால் தாக்கி, கைபையை வீசி எரிந்து தகராறு செய்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது.

இதுகுறித்து எஸ்ஐ லோகிதாட்சன் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து அக்‌ஷயா, அவரதுகணவர் சத்யராஜ், வினோத் குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்துஒரு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.மூவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT