க்ரைம்

இரு தரப்பினரிடையே மோதல் - திருவள்ளூரில் 6 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: அத்திமாஞ்சேரிப்பேட்டையில் முருகப்பெருமான் மற்றும் அம்பேத்கர் ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டை அடுத்த அத்திமாஞ்சேரிப் பேட்டையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு முருகப் பெருமான் திருவீதி உலா நடைபெற்றது.அப்போது, மற்றொரு பிரிவினர் சட்டமேதை பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் அவரது படத்துடன் ஊர்வலம் சென்றனர்.

அப்போது, ஓர் இடத்தில் இருதரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அருகில் இருந்த கார், ஆட்டோ, ஜேசிபி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

இதுதொடர்பாக அம்பேத்கர் ஊர்வலத்தில் பங்கேற்ற விஷ்ணு, சந்தோஷ், விக்னேஷ், பிரவீன், சந்த்ரு பிரகாஷ், சாய் கிரண் ஆகிய 6 பேர் மீது பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT