க்ரைம்

திருப்பூர் | ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.2.80 கோடி திருட்டு

செய்திப்பிரிவு

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த சுகந்தி என்பவருக்கு, கோபிபாரதி நகரில் வீடு உள்ளது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்சுதர்சன், இந்த வீட்டை ரூ.3 கோடிக்கு வாங்க முடிவு செய்து, முன்பணமாக ரூ.15 லட்சம் தந்து வீட்டின் சாவியைப் பெற்றார்.

தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு அறையில், மீதித் தொகையான ரூ.2.80 கோடியை வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு புதிய வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த கோபி போலீஸார், 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில், திருட்டு நடந்த அன்று, அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. போலீஸார் விசாரித்து இருவரை கைது செய்தனர்.

பங்குதாரர்கள் 2 பேர் கைது: இதுகுறித்து போலீஸார் கூறியது: சுதர்சனின் பங்குதாரர்களாக செயல்பட்ட ஸ்ரீதர் மற்றும் பிரவீன்ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களது காரிலிருந்து பணம் மீட்கப்பட்டது என்றனர்.

SCROLL FOR NEXT