மதுரை: மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27). இவரது கணவர் ராஜ்குமார் (27), தனியார் நிறுவன ஊழியர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ஐஸ்வர்யா தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், தனது நண்பரின் பெயரில் போலி முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் மனைவி பற்றி தவறான தகவலுடன் படங்களை மொபைல் போனுக்கு அனுப்பி தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் ராஜ்குமார் மீது தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் திலகவதி வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.