க்ரைம்

சென்னை | ரூ.5 கோடி மோசடி வழக்கில் கொல்கத்தா தொழிலதிபர், மனைவி கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையைச் சேர்ந்த நிறுவனத்திடம் ரூ.5 கோடி மோசடிசெய்த வழக்கில், கொல்கத்தா தொழிலதிபர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.

திருவான்மியூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தை தொடர்புகொண்ட, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய்குமார் கெஜ்ரிவால் (49), அவரது மனைவி பூனம் கெஜ்ரிவால் (40) ஆகியோர், தங்கள் நிறுவனத்துக்கு ரூ.8 கோடி மதிப்பிலான சர்க்கரை மூட்டைகளை விநியோகிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சர்க்கரை கொள்முதல் செய்த திருவான்மியூர் நிறுவனம், கொல்கத்தா நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதற்காக ரூ.3 கோடி வழங்கிய நிலையில், மீதம் ரூ.5 கோடி கொடுக்கவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த திருவான்மியூர் நிறுவன முதுநிலை மேலாளர் விஜய்கார்த்தி, இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை மேற்கொண்டனர். இதில் ரூ.5 கோடியை மோசடி செய்தது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, கொல்கத்தா சென்றபோலீஸார், சஞ்சய்குமார் கெஜ்ரிவால், அவரது மனைவி பூனம் ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT