திருவண்ணாமலை: ஆரணி அருகே 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டத்தில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பூபாலன் (66) என்பவர் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 9-ம் தேதி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த அப்போதைய ஆய்வாளர் ரேகாமதி, பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தார்.
இந்த வழக்கின் விசாரணை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி பார்த்தசாரதி நேற்று தீர்ப்பளித்தார். அதில், பூபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து, பூபாலன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.