சென்னை: சென்னை கே.கே.நகர், முனுசாமிசாலையில் உள்ள பிரபல தனியார் வங்கியின் ஏடிஎம் மையத்துக்கு நேற்று அதிகாலை 1.20 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வந்து, ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைக்க முயன்றார்.
இந்த காட்சிகளை ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் ஐதராபாத்தில் உள்ள வங்கியின் தலைமைகட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு வங்கி அதிகாரிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இதுகுறித்து கே.கே.நகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து இரவு ரோந்து பணியில்இருந்த வடபழனி சரக உதவி ஆணையர் பாலமுருகன்,அசோக் நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலன் மற்றும் போலீஸார் சம்பவ இடம் விரைந்துவிசாரணை மேற்கொண்டனர்.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கமுடியாததால் கொள்ளையன் அங்கிருந்து தப்பிவிட்டார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் குறித்து சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்துபோலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்