திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் நள்ளிரவில் ஆய்வுப் பணி மேற்கொண்டார். 
க்ரைம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நள்ளிரவில் ஏடிஜிபி திடீர் ஆய்வு

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் நள்ளிரவில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், காஞ்சி சரக காவல்துறை துணைத் தலைவர் பகலவன் ஆகியோருடன் இணைந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென நள்ளிரவில் ரோந்து பணி சென்று ஆய்வு மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, மாவட்டம் முழுவதும் குற்றச் சம்பவங்கள்எதுவும் நடைபெறாத வகையில் இரவில் ரோந்து பணியில் இருக்கும் போலீஸார் முறையாக பணி செய்கிறார்களா என ஆய்வு செய்தனர். மேலும், இரவு முழுவதும் விழித்திருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போலீஸாருக்கு கூடுதல் டிஜிபி சங்கர் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் புகார்கள் மீதான விசாரணை மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் பற்றி கேட்டறிந்து, நிலுவையிலுள்ள மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காண உத்தரவிட்டனர்.

இந்த ஆய்வின் போது, திருவள்ளூர் எஸ்.பி.சீபாஸ் கல்யாண், டிஎஸ்பி விவேகானந்தா சுக்லா, திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்ம பபி மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT