க்ரைம்

விருத்தாசலம் | லஞ்சம் வாங்கியதாக விஏஓ கைது

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் பண்ணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவ சாயி சுரேஷ்பாபு. இவர் தனது சகோதரர் நிலப் பட்டா மாற்றம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தியை அணுகினார்.

அப்போது அவர் பட்டா மாறுதலுக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்கோரி, சுரேஷ்பாபுவை 3 மாதங்களாக அலைக்கழித்து வந்தார். லஞ்சம் வழங்க முன்வராத சுரேஷ்பாபு, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் ஆலோசனைப்படி செயல்பட்ட சுரேஷ்பாபு, நேற்றுபுகழேந்தியை சந்தித்து பட்டாமாற்றம் தொடர்பான விண்ணப்பத்திற்கு லஞ்சமாக ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.

அப்போது அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடலூர் லஞ்ச ஒழிப்பு கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான போலீஸார், புகழேந்தியை கையும் களவுமாக பிடித்து, விசாரணைக்காக கடலூர் அழைத்துச் சென்றனர். புகழேந்தியும், சுரேஷ்பாபுவும் உறவினர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.

SCROLL FOR NEXT