க்ரைம்

சென்னை | 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: பட்டினப்பாக்கத்தில் ஆட்டோவில் கடத்தி வந்த 40 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை உட்புற சாலையில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் இருந்த மூட்டை குறித்து ஓட்டுநரிடம் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீஸார், மூட்டையை பிரித்து சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, பிடிபட்டவர் புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த செல்வம் (55) என்பதும், இவர் மீது ஏற்கெனவே சங்கர் நகர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவையும், ஆட்டோவையும் பறிமுதல் செய் தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT