அரிய வகை குரங்குகள் 
க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் 4 அரிய வகை குரங்குகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த வினோத் (28), விக்னேஷ் (34) ஆகியோர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடைகளில் மர்மமோசெட் எனப்படும் தென் அமெரிக்க வனப்பகுதியில் அதிகமாக காணப்படும் அபூர்வ வகைவெளிநாட்டு குரங்குகள் 4 இருந்தன.முறையான அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக குரங்குகளை கொண்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, குரங்குகளை மலேசியாவுக்கு விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டது. அதற்கான செலவுகளை அவர்களிடம் வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT