பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

கும்மிடிப்பூண்டியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி பகுதியில் அமைந்துள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் ஒன்றில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஏடிஎம் மையத்தில் இந்த கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. இருந்தும் அலாரம் அடித்த காரணத்தால் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

இதுகுறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம் இயந்திரத்தின் அடிபாகத்தை உடைத்து இந்த கொள்ளையில் கொள்ளையர்கள் ஈடுபட்டுள்ளனர். அலாரம் அடித்த காரணத்தால் அலர்ட் ஆகி அங்கிருந்து கொள்ளையர்கள் சென்றுள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறை விசாரித்து வருவதாக தகவல். கொள்ளை முயற்சி நடைபெற்ற இடத்தில் கைரேகை சேகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் திருவண்ணாமலை, கலசப்பாக்கம் மற்றும் போளூரில் உள்ள நான்கு ஏடிஎம் மையங்களில் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த குற்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த கொள்ளை வழக்கில் சுமார் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT