க்ரைம்

ஸ்ரீவில்லி. | மனவளர்ச்சி பாதித்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 20 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர்: சிவகாசி போஸ் காலனியை சேர்ந்தவர் இருளப்பன் (50). இவர் கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் ஏஜென்டாக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மனவளர்ச்சி பாதித்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்தார்.

இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி கிழக்கு போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருளப்பனை கைது செய்தனர். வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், இருளப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

SCROLL FOR NEXT