திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம் மையங்களில் பிப்.12-ம் தேதி ரூ.73 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய வாஹித் என்பவர் 7-வது நபராக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தனிப்படை போலீஸார், ஹரியாணா, கோலார் ஆகிய இடங்களில் முகமது ஆரீப் (35), ஆசாத் (36), அப்சல் ஹூசேன் (26), குத்ரத் பாஷா (43), கொள்ளை சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட நிஜாமுதீன் (37) மற்றும் சிராஜூதீன் (50) ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 7-வது நபராக ஹரியாணாவைச் சேர்ந்த வாஹித் (36) என்பவரை அசாம் மாநிலம் சராய்தியோ மாவட்டத்தில் தனிப்படையினர் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.